கதலியாகுவாயே…!
கடவுளிங்கே ஒருவனடா – அதைக்
கூறு போட்டவன்
மனிதனடா
இடமளிக்கும் கடவுளுக்கு
– உன்
இதயத்தில் இடம்
கொடடா.
மொழி வளர்க்கும்
மனிதனடா – இவன்
மொழிவதை நின்று
கேளடா
சுயம்வரத்தில்
நின்மொழியை – நீ
நயமாய் என்றும்
பரப்பிடடா.
உறங்காத காற்றும்கூட
உறங்கும்
உன்னிடத்தில்
உறைந்ததில்லை
இறக்குமிந்த உடலுக்கு
– நித்தம்
அலங்காரம் தேவை
தானோ?
ஆயிரம் தெய்வங்கள்
உண்டுங்கே ஆயினும்
மாதா பிதாவுக்கு
ஈடில்லையே
பாயிரம் உனக்கு
பாடிடவே – நீ
தாயான வாழ்க்கையை
வாழ்ந்திடடா.
புலன்கள் ஐந்தும்
ஒன்று பட்டாலே – உன்
நலன்கள் எல்லாம்
நாட்டுக்கடா
இல்லங்கள் உனக்குச்
சொந்தமடா – அதில்
இனங்கள் எதுவும்
இல்லையடா.
கதலியாய் என்றுனை
ஆக்கிக்கடா – உனக்கு
கதவுகள் ஆயிரம்
திறந்திருக்கும்.
உதவியாய் என்றுனை
ஆக்கிக்கடா – உனக்கு
உதவிகள் ஆயிரம்
மடைதிறக்கும்.
Comments
Post a Comment