நீயும் நானும்
நெஞ்சிருக்கும் வரையிலே
நினைவினிலே – நீ இருப்பாய்
ஏ…க்கம் இதுஎன் ஏ…க்கம்.
நினைவினிலே நீயிருந்தால்
நெஞ்சினிலே யாரிருப்பாள்
தாகம் இது உன் தா…கம்.
மனதினிலே நீயிருந்தால்
கனவினிலே யார் வருவாள்
சொல்லு… ஏ… என் கண்ணே
இரவினிலே தூக்கமில்லே
இருந்தாலும் தூக்கம் வரலே
ஏனோ… அது … ஏனோ?
நீர் விழியில்
நீயிருக்க
கடல் நீரில் நானிருக்க
ஏனோ… இது… ஏனோ?
நிலவினிலே நீயிருக்க
நிலத்தினிலே நானிருப்ப
தேனோ … இது… ஏனோ?
Comments
Post a Comment