முக்கண்ணன் எங்கே?

         ஈரடியில் மூவுலகை

        அளந்தவன் எங்கே?

        தமிழுக்கே முக்கண்ணைத்

        திறந்தவன் எங்கே?

 

        கருங்கடலில் இருமீன்கள்

        துள்ளுவது முறையோ? – அந்தத்

        துள்ளலிலே தரை மீன்கள்

                  அள்ளுவது சரியோ?

 

          அலை நடுவே வீடு கட்டி

                    கரையோரம் கோலமிட்டேன்

          அடுத்த அலை வரும்போது

                    போட்ட கோலம் தேடுகின்றேன்.

 

          தென்னை இளம்நீரை எடுத்து

                    தெருவிற்கே அளித்து வந்தேன் – என்

          தென்றலான வாழ்வோ இன்று

                    தெருவோடு போகக் கண்டேன்.

 

          தந்தத்திலே மாலை செய்து

                    சாமிக்குப் போட்டு வந்தேன் – இன்று

          தந்திரத்தாலே மாறின வாழ்க்கை

                    தரம்கெட்டுப் போக நின்றேன்.

 

          நான் நடந்து போகும்போது

                    புலியும் பயந்து நிற்கும்

          நாளும் என்னைத் தானே

                    வழிமொழிந்து நின்றது.

         

          நானே இன்று  அழியும்போது

                    நாளும் என்று கடந்துபோகும்

          புலியின் வீரம் மங்கியதாலே

                    தருதலைகள் ஆடுதிங்கே

 

          ஈரடியில் மூவுலகை

                    அளந்தவன் எங்கே?

          தமிழுக்கே  முக்கண்ணைத்

                    திறந்தவன் எங்கே?

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா