குழந்தை

             குமுத வாய் திறந்து

குழந்தை சிரிக்கும் – அந்தச்

சிரிப்பினிலே பலப்பல

சிரிப்பொலி பிறக்கும்.

          அமுத வாய் திறந்து

                    குழந்தைமொழி பேசும் – அந்தப்

                    பேச்சினிலே பலப்பல

                    மொழிகள் பிறக்கும்.

          தமதென்று நினைக்கும் போது

                    தன்மையுணர் வடைகிறது

                    உண்மையுணர் கிறபோது

                    உரிமைப்பேச் செடுக்கிறது.

          சமதர்ம நாட்டினிலே

                    சமத்துவம் பேசிவிட்டு

                    மமத்துவம் பேசுபவரை

                    சம்மட்டியால் அடிக்கிறது.

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா