சலவை மூளை

 


        சலவைக்கு மூளையைக் கொடுத்துவிட்டு

செலவுக்கு நித்தமும் திண்டாடுறோம்

          கவலைக்கு மருந்து தேடாமலே

                    கவலை கவலை என்றாடுறோம்

          தவளையின் வாழ்வை உணராமலே

                    தரிகிடதம் போடும் மானிடரே

          குவளையில் நிறைந்த நீரிருக்க

                    பாலையில் கிணறு தோண்டலாமோ?

 

          மலையைப் புறட்டும் மானிடரே – உன்

                    மகோன்னத மென்ன மாண்டிடிச்சா

          சிலையைத் திருடி சீமைக்கு விற்கு

                    சீமைச் சரக்கில் மாய்ந்திட லாமோ

          சிலைமாதர் நிலைமாற கொலைமா னாக்கி – உன்

                    வலைக்கு முடிச்சைத் தேட லாமோ

          அலைக்குள் மனதைச் செலுத்தி விட்டால்

                    இலைச்சோறு சுவையை தந்திடுமோ.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்