கல்லூரிக்கு வரும் கடலலையே…

 


கருப்பு உடம்பை மறைத்திட

          கற்போடு வெள்ளையுடை அணிந்துக் கொண்டு

ஆடி அசைந்து வருகின்றாள், எந்தன்

          மகத்தான கல்லூரி முற்றத்திற்கு.

 

ஓடி வரும் பேருந்தை விட்டு

          ஓடி வரும் மாணவர்  போல்

ஆடி வரும் அலைமகளே

          படகுகள் தான் பேருந்தோ?

 

செண்டுகள் பலர் பூசிக் கொண்டு

          செட்டாய் நிற்பது போல்

பறந்து வரும் தென்றலே

          உன் ஃபாரின் செண்டோ

 

எங்கள் கல்லூரிகள்

          திறந்தவுடன் மூடுவதுபோல்

தென்றலை மட்டும் கொடுத்துவிட்டு

          தென்படாமல் செல்லுவதேன்?

 

வெள்ளைத் தாளில் கருப்பு மையால்

          எழுதுவது போல

வெள்ளை மையால்

          கரையோரம் எழுதுகின்றாய்.

 

முப்பது வருடம் ஆனதும்

          முட்டி போட்டிடுவார் – உனக்குத்

தலைமுடி நரைத்தாலும் இங்குத்

          தள்ளாடி வருவதேன்?

 

தினமிங்கே வேலை நிறுத்தம்

          தனக்கேது இடமென்று

தினம்தினம் வந்திட்டே

          திரும்பியே செல்கின்றாய்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்